×

அரசு இசைப்பள்ளியில் கிராமிய போட்டி 24ம் தேதி நடக்கிறது

ஈரோடு, அக். 23:   ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கிராமிய போட்டிகள் 24ம் தேதி நடக்கிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்கள், இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 6, 8, 9, 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இதில் 24ம் தேதி காலை 10 மணிக்கு பாட்டு, கிராமிய நடனம் மற்றும் பரதநாட்டிய போட்டிகள், மதியம் 2 மணிக்கு ஓவியப்போட்டியும் நடக்கவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் போட்டி நாளன்று நேரடியாக கலந்து கொள்ளலாம்.  இளைஞர்களுக்கான கலைப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சுய விபரத்தினை முழு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு தலைமையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பெரியஅக்ரஹாரம், ஈரோடு என்ற முகவரிக்கு 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட அரசு இசைப்பள்ளியை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Government Music School ,
× RELATED காவல்துறை நடத்தும் குறும்பட போட்டிக்கு நடுவரான பெண் இயக்குனர்