×

35 டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க ஆளில்லை

ஈரோடு, அக்.23: ஈரோடு மாவட்டத்தில் 198 டாஸ்மாக் மது கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், 195 கடைகளில் பார் நடத்தும் உரிமத்திற்கான ஏலம் கடந்த மாதம் 30ம் தேதி நடத்தப்பட்டது. இதில், 148 பார்கள் ஏலம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் 47 டாஸ்மாக் கடைகளில் பார் நடத்தும் உரிமத்திற்கான ஏலம் நேற்று நடந்தது. இதில், 12 கடைகள் மட்டும் ஏலம் போனது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரங்கராஜன் கூறுகையில்,‘‘47 பார் உரிமத்திற்கான நடந்த ஏலத்தில் 12 மட்டுமே ஏலம் போனது. மீதமுள்ள பார்களுக்கு அடுத்த மாதம் இறுதியில் ஏலத்தேதி அறிவிக்கப்பட்டு, மீண்டும் ஏலம் நடத்தப்படும்’’ என்றார்.

Tags :
× RELATED விலை ரூ.49... விலை ரூ. 35... கொரோனா...