×

தலைவன்கோட்டையில் பழுதான மின்கம்பத்தில் டிரான்ஸ்பார்மர் நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

நெல்லை, அக். 23:  தலைவன்கோட்டை பஞ். முன்னாள் தலைவர் பூசைப்பாண்டியன், கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தலைவன்கோட்டை வண்ணார்தெருவில் மின்கம்பம் பழுதடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்திலேயே  டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள அரண்மனை தெருவில் புதிய சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். ஊராட்சி மன்ற அலுவலகத்தை சுற்றி காம்பவுன்ட் சுவர் கட்டித் தர வேண்டும்.

விளைநிலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் தரையை தொடும் நிலையில் உள்ளது. கொல்லி ஆற்றில் பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. பாலத்தை உயர்த்தி விரைந்து முடிக்க வேண்டும். பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள சமான்தாண்வர் குளத்தை தூர்வார வேண்டும். தனியார் பேரூந்துகள் மாலை நேரத்தில் ஊருக்குள் வராததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஊருக்குள் பேரூந்து வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Collector ,headquarters ,Transformer ,
× RELATED ஆனைகட்டி மழைவாழ் மக்கள் கோவை கலெக்டரிடம் மனு