×

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் நூதன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.23: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நேற்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சலோமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தென்னநெட்டில் அடுப்பு செய்து, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து வடை சுட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அத்தியாவசிய பொருட்களின் வலை உயர்வை குறைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தாமதமின்றி அனைத்து பொருட்களையும் கிடைக்க செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் அனைவருக்கும் வேலை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுசீலா, மாவட்ட பொருளாளர் பாண்டிச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,Democracy Maths Association ,
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்