×

கறம்பக்குடி பகுதியில் விவசாய பணிகள் மும்முரம் வாழைக்குறிச்சியில் 125 ஏக்கர் தரிசு நிலம் விளைநிலமாக மாற்றம்

பொன்னமராவதி, அக்.23: பொன்னமராவதி அருகே வாழைக்குறிச்சியில் 125ஏக்கர் தரிசு நிலத்தை விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. பொன்னமராவதி வட்டார வாழைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வாழைக்குறிச்சி உழவர் உற்பத்தியாளர் கூட்டுப்பண்ணைய குழுவைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா தலைமையில் வேளாண்மை உதவிஇயகுனர் சிவராணி முன்னிலையில் 125 ஏக்கர் தரிசு நிலத்தை அழித்து விளைநிலமாக மாற்றினர். இதனையடுத்து விவசாயிகள் தங்கள் 125 ஏக்கர் நிலத்திலும் கூட்டுப் பண்ணையமாக பயறு சாகுபடி செய்ய தீர்மானித்துள்ளனர். இதில் துணை வேளாண்மை உதவிஇயக்குனர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : land ,
× RELATED அரசு நிலத்தில் குடிசை அமைப்பதில் இரு தரப்பினர் திடீர் மோதல்