×

சீரமைக்க பெற்றோர் கோரிக்கை நாம் தமிழர் கட்சியினர் நல்லூர் டோல்பிளாசாவை முற்றுகையிட்டு தர்ணா

புதுக்கோட்டை, அக்.23: புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் நல்லூர் பகுதியில் உள்ள டோள் பிளாசா உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வினோத் காரில் வந்துள்ளார். அப்போது அங்குள்ள ஊழியர்கள் டோல் கட்டணம் கேட்டபோது அங்குள்ள ஊழியர்களுக்கும், வினோத்திற்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாமாக மாறியுள்ளது. இதில் காயமடைந்த வினோத் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த பிரச்னையில் வினோத் கொடுத்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் டோள் பிளாசா ஊழியர்கள் தமிழழகன், சந்துரு ஆகிய இருவரையும் மாத்தூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மேலும் ஆனந்த், குணா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் நாம் தமிழர் கட்சியினர் டோள் பிளாசாவை முற்றுகையிட்டு கைது செய்த நபர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வக்கில் பிரபு தலைமை வகித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடத்த போராட்டத்தின்போது எஸ்பி செல்வராஜ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Tags : Parents ,Tamils ,Nallur Tolphisa ,
× RELATED கொரோனா ஊரடங்கு எதிரொலி!: மாணவர்களின்...