×

போக்குவரத்து விதி மீறிய 24 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை, அக். 23: உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர் அப்பாண்டைராஜன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், அகிலன், செல்வராஜ் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேசிய நெடுஞ்சாலை மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வழியாக குடிபோதையிலும், லைசென்ஸ் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களை ஓட்டிச் சென்ற 24 வாகன ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.Tags :
× RELATED டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி