×

சம்பா தாளடி நடவு வயலில் உரமிடும் பணியில் விவசாயிகள் மும்முரம்

நீடாமங்கலம்,அக்.23: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை கோட்டப்பகுதிகளில் குறுவை சாகுபடி செய்தவர்கள் தற்போது அறுவடை பணியை முடிக்கும் தருவாயில் உள்ளனர்.தற்போது பெய்து வரும் மழையால் இயந்திர அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் அவதி பட்டு வருகின்றனர்.இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தி சம்பா மற்றும் தாளடி நடவு பணிகள் கானூர், அன்னவாசல், ராஜப்பையன்சாவடி, பெரம்பூர்,தேவங்குடி,அரிச்சபுரம்,மேலாளவந்தசேரி,பரப்பனாமேடு,கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் சம்பா தாளடி நடவு முடிந்த உடன் மேல் உரம்,இரண்டாவது உரம் என நடவு வயலுக்கு உரமிடும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

Tags : samba taladi planting field ,
× RELATED மயிலாடுதுறை அருகே நெல் விதைப்பை...