×

ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ஒவ்வொரு வீட்டிலும் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் கருத்தரங்கில் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, அக்.23: ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ஒவ்வொருவீட்டிலும் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என ஆலத்தம்பாடி அரசு பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி ஜானகி அண்ணி அரசு மேல்நிலைப்பள்ளியில் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துறை, நாட்டு நலப்பணிதிட்டம், தேசிய பசுமை படை சார்பில் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்த கருத்தரங்கம் தலைமையாசிரியர் சண்முகவேலு தலைமையிலும், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை உதவிஇயக்குநர் முகமது சாதிக் சிறப்பு அழைப்பாளராககலந்துகொண்டு மாடி தோட்டம், பழக்கடை காய்கறி தோட்டம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து பேசினார். அப்போது வீடுகளில் எளிதாக காய்கறி சாகுபடி செய்யும் வகையில் வெண்டை, கத்தரி, புடலை, பாகல், அவரை, கொத்தவரங்காய் போன்ற நாட்டுவகை காய்கறிவிதைகள் நூறு சதவீதமானியவிலையில் வழங்கப்படுகிறது. இதைபயன்படுத்தி மாணவர்கள்தங்கள்வீடுகளில் சிறியஅளவிலானகாய்கறி தோட்டம், இடமில்லாதவர்கள் மாடி பகுதிகளில் தோட்டம் அமைத்து காய்கறிஉற்பத்தி செய்யலாம்.இயற்கை முறையிலான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் நஞ்சில்லாத சத்துள்ள காய்கறிகள்நமக்கு கிடை க்கும் இதை பயன்படுத்துவதன் மூலம் ஊட்டசத்து குறைபாடு நீங்கும்.எதிர்காலங்களில் நோயற்ற மாணவ சமுதாயத்தை நாம் காண முடியும் என்றார்.

மேலும் மாடி தோட்டம் அமைப்பது குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அதில் விதைவிதைக்கும் முறை, உரமிடுதல், நீர் மேலாண்மை, பூச்சி கட்டுப்பாடு, விதை தேர்வு, அறுவடை முறை போன்றவை செய்து காண்பிக்கப்பட்டது. மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சண்முகசுந்தரம், பாலதண்டாயுதம், சுப்பிரமணியன் ஆகியோர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்து கூறினர். முன்னதாக என்எஸ்எஸ்திட்ட அலுவலர் கண்ணதாசன் வரவேற்றார். முடிவில் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் குமணன் நன்றி கூறினார்.இயற்கை முறையிலான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் நஞ்சில்லாத சத்துள்ள காய்கறிகள் நமக்கு கிடைக்கும் இதை பயன்படுத்துவதன் மூலம் ஊட்டசத்து குறைபாடு நீங்கும்.எதிர்காலங்களில் நோயற்ற மாணவ சமுதாயத்தை நாம் காண முடியும்

Tags : Seminar ,Vegetable Garden ,Home ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்