×

சாலையில் உடைந்து தொங்கும் பாசன வாய்க்கால் மதகு வாகன ஓட்டிகள் கடும்அவதி

நீடாமங்கலம்,அக்.23: நீடாமங்கலம் அருகில் பெரம்பூர்-கண்ணம்பாடி சாலையில் உடைந்து தொங்கும் வாய்க்கால் மதகால் வாகனஓட்டிகள் கடும்அவதியடைந்து வருகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ளது பெரம்பூர் ஊராட்சி இங்கு கண்ணம்பாடி கிராமத்திற்கு செல்லும் வழியில் பெரம்பூர் பாசன வாய்க்கால் மதகு உள்ளது. இந்த மதகு கட்டை உடைந்து பாதி வாய்க்காலிலும்,பாதி அந்தரத்திலும் தொங்கி வருகிறது. அது மட்டும் அல்லாமல் சாலையில் மிகப்பெரிய அளவுக்கு ஓட்டையுள்ளது. இவ்வழியாக பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கண்ணம்பாடி, காரிச்சாங்குடி,தேவங்குடி,மடப்புரம், ராஜப்பையப் சாவடி,கானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வரும் முக்கிய சாலையாக உள்ளது.இந்த பாசன வாய்க்கால் மதகு உடைந்தவுடன் அப்பகுதியில் இரவு நேரங்களில் செல்பவர்கள் ஓட்டையில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Irrigation canal ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி