×

மன்னார்குடியில் இன்று நடக்கிறது மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மன்னார்குடி, அக். 23: மன்னார்குடியில் இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மன்னை கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய மன்னார்குடி செயற்பொறியாளர் ராதிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மன்னார்குடி கோட்டம் சார்பில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (23ம் தேதி) காலை 10 மணியளவில் மன்னார்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மன்னார்குடி கோட்டதிற்க்கு உட்பட்ட மன்னார்குடி, வடுவூர், உள்ளிக் கோட்டை, பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூர், கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிகளின் மின்நுகர்வோர்கள் மின்சார வாரிய சம்பந்தமான தங்களின் குறைகளை நேரில் வந்து தெரிவிக் கலாம். இவ்வாறு அவர் அதில் ெதரிவித்துள்ளார்.

Tags : grievance meeting ,Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...