×

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை வழங்க கோரி நாகர்கோவிலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக்.23 :  இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகர்கோவிலில் வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்ட கிளை சார்பில், நாகர்கோவில் நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் வக்கீல் பரமதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வக்கீல் மரிய ஸ்டீபன், முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நாகர்கோவில் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் அனிட்டர் ஆல்வின், குழித்துறை முன்னாள் நகராட்சி தலைவர் டெல்பின், வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர்கள் வெற்றிவேல், பால ஜனாதிபதி மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.  மாவட்ட பொது செயலாளர் வக்கீல் பரமதாஸ் பேசுகையில், ஆந்திரா, கேரளா, கோவா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்படிப்பு முடித்து, முறைப்படி வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள் தொழில் செய்வதற்கு வசதியாக அந்தந்த மாநில அரசுகள் உதவி தொகை வழங்குகிறது. அதே போல், தமிழக அரசும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும். 5 வருடத்துக்கு இந்த தொகை வழங்கப்பட வேண்டும். அப்போது சட்டப்படிப்பு முடிக்கும் இளைஞர்கள், வக்கீல் ெதாழிலில் காலூன்ற முடியும். தமிழக அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றார்.


Tags : Lawyers ,Nagercoil ,
× RELATED வழக்கறிஞர்கள் சாலை மறியல்