×

தீபாவளியை முன்னிட்டு விடுமுறைக்கு தடை டாஸ்மாக் கடையில் முழு அளவில் இருப்பு

வேலூர், அக்.23: தீபாவளியொட்டி டாஸ்மாக் கடைகளில் முழு அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் லோ கிரேட், மீடியம், பிரீமியம், சூப்பர் பிரீமியம் என 60 முதல் 70 வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சாதாரண ரகம் 180 மி.லி. கொண்ட குவார்ட்டர் பாட்டில் விலை 150 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதில் மொத்தம் 15க்கும் மேற்பட்ட பிராண்டுகள் உள்ளன. நடுத்தர ரக மதுவின் குவார்ட்டர் விலை 150 முதல் 250 விற்கப்படுகிறது. இதில் மொத்தம் 20 பிராண்டுகள் உள்ளன. உயர் ரக மதுபானத்தில் 15 பிராண்டுகளுக்கும் மேல் உள்ளன. குவார்ட்டர் விலை முதல் அரை பாட்டில் விலை, முழு பாட்டில் விலை என 250 முதல் 720 வரை விற்பனை செய்யப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் சாதாரண ரக மது பாட்டில்களும், நடுத்தர மதுபாட்டில்கள்தான் தினமும் அதிகளவில் விற்பனை ஆகும். கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விற்பனை குறைந்துள்ளது. இதற்கு காரணம் புரட்டாசி மாதம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் சரக்குகளை அதிகளவில் விற்பனை செய்ய வேண்டும். இதனால் சாதாரண ரகம், நடுத்தர ரகம், உயர் ரகம் மதுபானங்களை டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, குடோன்களில் முழு அளவில் சரக்குகளை இருப்பு வைக்க டாஸ்மாக் துறை உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை விதித்துள்ளதாக டாஸ்மாக் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Task Shop ,
× RELATED வண்டலூர் உட்கோட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு