பொன்மார் ஊராட்சியில் அவலம் வனத்துறை தடையால் அமைக்கப்படாத தார்ச்சாலை

திருப்போரூர், அக்.23: திருப்போரூர் ஒன்றியத்தில் பொன்மார் ஊராட்சியில் அடங்கிய போலச்சேரி கிராமத்தில் இருந்து  தாழம்பூர் ஊராட்சிக்கு செல்ல 2 கிமீ தூரம் சாலை உள்ளது. இந்த  சாலையை திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பராமரிக்கிறது. கடந்த  30 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலையை அவ்வப்போது மண் சாலையாக அமைத்து ஒன்றிய  நிர்வாகம் பராமரித்து வந்தது. இந்நிலையில் இச்சாலையில் உருவாகியுள்ள புதிய  குடியிருப்புகள்மு, மக்கள் தொகையும் அதிகரித்துள்ளதால், இச்சாலையை தார்ச்சாலையாக மாற்ற முடிவு செய்தனர், இதையடுத்து ஒன்றிய நிர்வாகம்  சார்பில் 20 லட்சம் மதிப்பில் சாலைபணிகள் நடந்தன. இச்சாலையில்சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு  வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வன  விலங்குகள் இருப்பதால், அமைக்கக் கூடாது என வனத்துறை தடை விதித்தது. இதையடுத்து 300 மீட்டர் சாலையை தவிர்த்து மற்ற  இருபுறமும் புதியசாலை அமைக்கப்பட்டது.

ஆனால்,பணிகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் சாலை அமைக்க ஆட்சேபனை இல்லா சான்று கேட்டு, வனத்துறைக்கு  ஒன்றிய நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. கடந்த 2018  மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்தற கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டு வனத்துறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை வனத்துறை  சார்பில் இந்த சாலையை அமைக்க ஆட்சேபனை இல்லா சான்று வழங்கவில்லை. இதனால், இந்த சாலையை பயன்படுத்தும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள்  இரவு நேரங்களில் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை  கருத்தில் கொண்டு இச்சாலையை தார்ச்சாலையாக மாற்ற வனத்துறை ஆட்சேபனை இல்லா  சான்று வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>