×

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்தை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உறுதி

சென்னை: சென்னைபச்சையப்பன் கல்லூரியில் காளிராஜ் என்பவர் முதல்வராக இருந்தார். அவர் ஓய்வு பெற்றதையடுத்து என்.சேட்டு என்பவர் நியமிக்கப்பட்டார்.  இவரது நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும், இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி தர் உள்ளிட்ட 7 பேராசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், முதல்வர் தேர்வு நடைமுறை தொடர்பாக மனுதாரர் அளித்த புகார்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.  இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சேட்டு மேல்முறையிட்டு மனு செய்தார். மனு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வு முன்விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரை முதல்வராக நியமனம் செய்ததை ரத்து செய்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான  பச்சையப்பன் கல்லூரி, காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி கல்லூரி, செல்லம்மாள் கல்லூரி, ஆகிய 4 கல்லூரியில் முதல்வர்களை நியமிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பால் வசந்தகுமார் நியமனம் செய்யப்படுகிறார். இக்கல்லூரிகளில் முதல்வர் நியமனம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும். சேட்டுவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : nominee ,Brihayyappan College CM ,
× RELATED மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை...