×

கருணைத் தொகை ரூ.4,000 வழங்க கோரி மின் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக்.18: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியூ) சார்பில் திருச்சி தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். திருச்சி மாநகர வட்ட செயலாளர் செல்வராசு, லால்குடி கோட்ட செயலாளர் பழனியாண்டி ஆகியோர் ஆர்பாட்டம் குறித்து விளக்கி பேசினர். ஒப்பந்த ஊழியர்கள் சேகர், சார்லஸ், சுப்பிரமணி, தர்மலிங்கம், சீனிவாசன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மண்டல தலைமை பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ‘மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் கருணைத் தொகை ரூ.4,000 உடனே வழங்க வேண்டும். அரசு அறிவித்த தினக்கூலி ரூ.380 உடனே வழங்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகள் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags : Power contract workers ,Rs ,
× RELATED கொரோனா நிவாரணத் தொகையை ரூ.1,000லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி