×

ஆங்கில மருத்துவம் பார்த்த ஹோமியோபதி டாக்டர் கைது

சேலம், அக். 18: சேலத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த ஹோமியோபதி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி சீனிவாசன் உள்பட அதிகாரிகள் கருப்பூர் பகுதியில் உள்ள மருத்துவ கிளினிக்குகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஹோமியோபதி டாக்டரான குமாரப்பன்(69) என்பவரின் கிளினிக்கை சோதனை செய்தனர். இதில், ஹோமியோபதி டாக்டரான இவர், நோயாளிகளுக்கு ஊசி போட்டு ஆங்கில மருத்துவம் பார்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த மருத்துவக்குழுவினர் கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹோமியோபதி டாக்டரான குமாரப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : doctor ,
× RELATED போலி டாக்டர் கைது