ராசிபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

ராசிபுரம், அக்.18: ராசிபுரம்  தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் ராயல் மற்றும் விவேகானந்தா  பல் மருத்துவமனை இணைந்து, இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர். முகாமிற்கு ரோட்டரி கிளப் தலைவர்  மருத்துவர் இளஞ்செழியன் தலைமை வகித்தார். செயலாளர் பூபாலன் வரவேற்றார்.  திட்ட சேர்மன் ராஜூ முன்னிலை வகித்தார். முகாமினை மாவட்ட ஆளுனர் நடேசன்  தொடங்கி வைத்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 450 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் பரிசோதனை, பொதுசிகிச்சை அளிக்கப்பட்டு, இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் கலந்துகொண்டவர்களுகு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு  மருத்துவர்கள்  மோகனசுந்தரம், விஜய்பிரகாஷ், மாவட்ட துணை ஆளுனர் சத்தியமூர்த்தி, ரோட்டரி கிளப்  நிர்வாகிகள் அன்பழகன், ரமேஷ், ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு, அக்.18: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: திருச்செங்கோடு  திமுக அலுவலகத்தில் வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு, நாமக்கல் மேற்கு   மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில்  நடக்கிறது.  இந்த கூட்டத்தில், இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை மற்றும்  கட்சி வளர்ச்சி பணிகள்  குறித்து ஆலோசனை நடைபெறும். எனவே, இக்கூட்டத்தில்  மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர,  ஒன்றிய, பேரூர்  செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை  அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

Related Stories:

>