×

கிருஷ்ணகிரியில் மாதாந்திர விளையாட்டு போட்டி

கிருஷ்ணகிரி, அக்.18: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், ஜூலை மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது.போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் துவக்கி வைத்தார். இதில், பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தடகளம், நீச்சல், கையுந்து பந்து மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. மாணவர்களுக்கான தடகளப் பிரிவில், 100 மீ., 400 மீ., 1500 மீ., 5000 மீ., ஓட்டப் போட்டியும், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல் ஆகிய போட்டிகளும், மாணவிகளுக்கு 100 மீ., 200 மீ., 400 மீ., 3000 மீ., ஓட்டப் போட்டியும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டது.  தடகளத்தில், 92 மாணவர்கள், 74 மாணவியர், நீச்சலில் 85 மாணவகள், 64 மாணவியர், கால்பந்தில் 108 மாணவர்கள், 72 மாணவியர், கைப்பந்தில் 96 மாணவர்கள், 64 மாணவியர் என 655 பேர் பங்கேற்றனர்.  

Tags : Monthly Sports Competition ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின்...