×

ஓசூரில் 3 வது நாளாக 76 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஓசூர்,அக்.18: ஓசூரில் 3வது நாளாக 76 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓசூர் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் கேரி பேக்குகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக துப்புரவு அலுவலர்கள், ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில் 78 கிலோ பிளாஸ்டிக்பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதை ெதாடர்ந்து நேற்று 3வது நாளாக ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் நகரப்பகுதியில் உள்ள கடைகள், உணவகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சுந்தரமூர்த்தி, மணி, சீனிவாசன், வெங்கடேஷ், ரமேஷ் உள்ளிட்டோர் இணைந்து உழவர் சந்தை, தாலுகா அலுவலக சாலை, பாகலூர் சாலை, மலர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில் 76 கிலோ பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ₹28 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டது.


Tags : Hosur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...