×

கிருஷ்ணகிரியில் உணவு தானியங்கள் உற்பத்தி வாகன பிரசாரம்

கிருஷ்ணகிரி, அக். 18:  கிருஷ்ணகிரி வட்டாரப்பகுதிகளில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள், சிறு தானியங்கள் உற்பத்தி, விளைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி வட்டாரத்தில், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள், சிறு தானியங்கள் உற்பத்தி, விளைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் பிரசார வாகனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் வேளாண் கல்லூரி பயிற்சி மாணவிகள் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பச்சையப்பன் கூறியதாவது:ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், நமது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட பிரச்சார ஊர்தி அமர்த்தப்பட்டுள்ளது. இதை நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்(பொ) சண்முகம்கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பிரச்சார ஊர்தி பெரியமுத்தூர், மாதேப்பட்டி, பெல்லாரம்பள்ளி, பாலகுறி, செம்படமுத்தூர், பெத்தனப்பள்ளி, கம்மம்பள்ளி, மகாராஜகடை, நாரலப்பள்ளி போன்ற வட்டாரத்தின் அனைத்து கிராமங்களிலும், சிறு தானியங்கள் சாகுபடி தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் ராகி, சோளம், குதிரைவாலி, பயறுவகை, பயிர் சாகுபடி, பிரதமரின் பயிர் பாதுகாப்பு திட்டம், நுண்ணீர் பசானத்திட்டம், விவசாயிகளுக்கான ஓய்வூதியத்திட்டம், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி மானியங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தில், மாவட்ட திட்ட ஆலோசகர் பரசுராமன், வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், பிரியா, வேளாண்மை உதவி அலுவலர்கள் முத்துசாமி, விஜயன், புஷ்பாகரன், சென்னகேசவன், சிவராசு மற்றும் அட்மா திட்ட மேலாளர் நந்தினி, அதியமான் வேளாண் கல்லூரி மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags : Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்