×

மத்தூர் அருகே அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

போச்சம்பள்ளி, அக்.18: மத்தூர் அருகே, கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மவுனசுந்தரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சர்ஜான் வரவேற்றார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். வன அலுவலர் சிவக்குமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முரளிதரன், மருத்துவ அலுவலர் ரபீக், சுகாதார அலுவலர் ஹரிச்சந்திரன், சரவணன், சரண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்.  கொடமாண்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வினோதினி வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி, பட்டிமன்றம் நடந்தது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பேசினர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags : Science Exhibition ,Government School Near Mathur ,
× RELATED வத்திராயிருப்பு பள்ளியில் அறிவியல் கண்காட்சி