×

மாரியம்மன் கோயில் பள்ளம் தடுப்பணையை 30 அடியாக உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, அக்.18: தர்மபுரி  ஜெகநாதன் கோம்பை மாரியம்மன் கோயில் பள்ளம் தடுப்பணையை, 30 அடி உயரமாக உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சார்பில், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் புகழேந்தி கண்டன உரையாற்றி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், நல்லம்பள்ளி அருகே உள்ள ஜெகநாதன் கோம்பை மாரியம்மன் பள்ளம் தடுப்பணை சீரமைப்பில் உள்ள, முறைகேட்டை கண்டறிந்து முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையை விரிவாக்கம் செய்து, உயரத்தை 30 அடியாக உயர்த்த வேண்டும். கரையை உறுதியாக கட்ட ேவண்டும். அணையை அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும். கால்வாயை கான்கிரீட் கால்வாயாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதில்செல்வராஜ், நவீன்குமார், காசி, பார்த்திபன், ராதாகிருஷ்ணன், பாண்டுரங்கன், வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED ஆர்ப்பாட்டம்