×

தர்மபுரியில் இன்று தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி, அக்.18: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று(18ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இன்று (18ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி, நேர்முகத் தேர்வு அனுப்பப்படும்.இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள், விற்பனையாளர்கள், விற்பனை பிரதிநிதிகள், மேற்பார்வையாளர்கள், மேலாளர், கணினி இயக்குபவர், தட்டச்சர், கணக்கர், காசாளர், பழுது நீக்குநர் போன்ற பணியிடங்களுக்கு பட்டயம், பட்டபடிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : employment camp ,Dharmapuri ,
× RELATED 5,000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை.....