×

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

பாப்பிரெட்டிப்பட்டி, அக்.18: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள கருங்கலூரை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் (35). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரின் விவசாய நிலத்தில் உழவு செய்வதற்காக டிராக்டரை ஓட்டிச்சென்றார். அப்போது, தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு திரும்பும் போது, டிராக்டர் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் ஹரிச்சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிச்சந்திரன் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஆந்திராவில் டிராக்டர் மின்கம்பத்தில்...