×

வெங்கட்ரமண சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

காரிமங்கலம், அக்.18: கடத்தூர் அருகே மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் உற்சவ நிகழ்ச்சி, நாளை நடக்கிறது.தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த மணியம்பாடியில் பழமை வாய்ந்த வெங்கட்ரமண சுவாமி கோயிலில், புரட்டாசி மாதத்தை ஒட்டி ஆண்டுதோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமையான நாளை(19ம் தேதி) அதிகாலை சுவாமிக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் மேல்பள்ளிப்பட்டு செங்கத்தை சேர்ந்த வேடியப்ப செட்டியார் மற்றும் பெருமாள் செட்டியார் குடும்பத்தினர் சார்பில், காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு காலை உணவு, காலை 10 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது.

அன்னதானத்தை கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இரவு 7 மணிக்கு சுவாமி உற்சவம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள விழாக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் மனோகரன், ஊர் கவுண்டர்கள் ஜெயவேல், ஒமேகா பிரபு, அரூர் மணி, ஆறுமுகம், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் வசந்தன், பழனிசாமி, முன்னாள் தர்மகர்த்தா பழனி, சென்னை வெங்கடேசன், தங்கவேல், மனோகரன், மந்திரிகவுண்டர் பொன்னுசாமி, கோயில் அர்ச்சகர்கள் ராதா, அரசு, பூ அலங்காரம் பாலக்கோடு நாகராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Venkatramana Swamy Temple ,
× RELATED திருமலை திருக்கல்யாணம் சிறப்பு வழிபாடு