×

மாவட்டம் நிலவேம்பு கசாயம் வழங்கல்

காரியாபட்டி, அக்.18: காரியாபட்டியில் அமமுக சார்பில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.விருதுநகர் கிழக்கு மாவட்ட அமமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜா, எம்ஜிஆர் மன்ற தலைவர் சிவசாமி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வீரராஜன்,  பேரூர் கழக செயலாளர் சந்துரு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராம்குமார், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் கணேசன், துணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சித்துராமன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் வெயில் கண்ணன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.


Tags :
× RELATED இலவச நிலவேம்பு குடிநீர் சூரணம் விநியோகம் மாவட்ட சித்த மருத்துவர் தகவல்