×

புதிய ஷோரூம் திறப்பு ராம்கோ நூற்பாலை போனஸ் ரூ.8.12 கோடி உடன்பாடு

ராஜபாளையம், அக்.18: ராஜபாளையம் ராம்கோ குரூப் நூற்பாலை தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 2018-19ம் நிதி ஆண்டிற்கான போனஸ் ரூ.8.12 கோடி உடன்பாடு ஏற்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போனஸ் பேச்சுவார்த்தை ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, இயக்குனர் பி.ஆர்.வி.அபிநவ் ராமசுப்பிரமணியராஜா, தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குனர் என்.ஆர்.கே.ராம்குமார் ராஜா, விஷ்ணு சங்கர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர்.ஸ்ரீராமராஜா முன்னிலையில் நடந்தது. இதில் ராம்கோ குழுமத்தின் அனைத்து நூற்பாலைகளுக்கும் போனஸ் தொகையினை சேர்மன் அறிவித்தார்இதன்படி, ராம்கோ குழும நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அலுவலர்களுக்கு ரூ.8.12 கோடி போனஸ் அறிவித்து பட்டுவாடா செய்ய சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா உத்தரவிட்டார். இதில் ராம்கோ நூற்பாலை பிரிவின் தலைமை அதிகாரி மோகனரெங்கன், தலைமை நிதி அதிகாரி ஞானகுருசாமி, அசோசியேட் வைஸ் பிரசிடென்ட் (மனிதவளம்) நாகராஜன், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் தலைமை பொதுமேலாளர் சண்முகவேல், உதவி பொது மேலாளர் (மனிதவளம்) கண்ணன் கலந்து கொண்டனர். மில்ஸ் தொழிற்சங்கங்களின் சார்பில் எச்.எம்.எஸ் கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி விஜயன், ஐ.என்.டி.யு.சி கண்ணன் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ராம்கோ நூற்பாலை நிறுவனம் வழக்கம்போல் இந்த ஆண்டும் சிறப்பான போனஸ் தொகையை அறிவித்து தொழிலாளர்களை ஊக்கப்படுத்தியதற்கு தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் நன்றி தெரிவித்தனர்
 

Tags : Ramco ,
× RELATED ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினவிழா