×

ேதனியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேனி, அக். 18: தேனி பழைய, புதிய பஸ்ஸ்டாண்ட்களில் நகராட்சி நிர்வாகம் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.தேனியில் பழைய பஸ்ஸ்டாண்ட் மற்றும் புதிய பஸ்ஸ்டாண்ட்களில் நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள், பயணிகளின் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து கடை வைத்துக் கொண்டனர். இதுகுறித்து புகார்கள் நகராட்சிக்கு வந்தது. இதனை தொடர்ந்து தேனி டிஎஸ்பி முத்துராஜ் தலைமையில் போலீசாரும், நகராட்சி கமிஷனர் ராஜாராம், சுகாதார ஆய்வாளர் அறிவுச்செல்வம் உட்பட அதிகாரிகள் குழுவும் சென்று, பழைய பஸ்ஸ்டாண்ட், புதிய பஸ்ஸ்டாண்ட்களில் பயணிகளின் நடைபாதைகளில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். கடைகள் ஏலம் எடுத்த நபர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டுமே கடைகள் வைக்க வேண்டும். மீறினால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.Tags : Police Protection ,
× RELATED துறைமுகம் குடோனிலிருக்கும் அமோனியம்...