×

வஉசி பிறந்தநாள் விழா

தேவகோட்டை, அக்.18:  தேவகோட்டை வட்ட வ.உ.சி.பேரவையின் 23ம் ஆண்டு விழா மற்றும் வ.உ.சிதம்பரம்பிள்ளை 148வது பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது. பேரவைத்தலைவர் வழக்கறிஞர் குமாரவேல்பிள்ளை தலைமை வகித்தார். ஜெயமணி, காளிதாஸ், சேதுமாணிக்கம், வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். பொருளாளர் ஜானகிராமன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். அமைப்புச்செயலாளர் வீரமாகாளி ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன் (திமுக) வ.உ.சிதம்பரம் பிள்ளை படத்தை திறந்து வைத்து பேசினார். நல்லாசிரியர் விருது பெற்ற முத்துராமசாமி பாராட்டி கவுரவிக்கப்பட்டார். சென்னை ஆடிட்டர் சகாயராஜ், மதுரை செல்வராஜ், கவிஞர் முத்து பழனியப்பன், ரவிக்குமார், சகாயம் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். கல்வியில் சிறந்து விளங்கி மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். நலிவடைந்த குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கினர். பாராளுமன்றத்தில் வ.உ.சிதம்பரம்பிள்ளை வெண்கலச்சிலையை நிறுவ வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு வ.உ.சி பெயர் சூட்ட வேண்டும். அரசு அலுவலகங்களில் வ.உ.சி உருவப்படம் வைத்திட வேண்டும். வெள்ளாள சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைத்து வெள்ளாளர் என பெயரிட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நல்லாசிரியர் சுப்பு என்ற சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார்.


Tags : Wucy ,birthday party ,
× RELATED வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில்...