×

உலக கை கழுவும் தினம்

தேவகோட்டை, அக்.18:  தேவகோட்டை வைரம் குரூப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக கை கழுவும் தினம் மற்றும் இளைஞர் எழுச்சி தின விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர் தியாகராஜன் கை கழுவுவதன் அவசியம் பற்றி மாணவர்களிடையே எடுத்துக்கூறினார். ஆசிரியர் சுரேஷ் அப்துல்கலாம் பிறந்த நாள் குறித்துப் பேசினார். ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர். மரக்கன்றுகள் நட்டனர்.

Tags : World Hand Washing Day ,
× RELATED அரசு பள்ளிகளில் உலக கை கழுவும் தினம் கொண்டாட்டம்