×

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

தேவகோட்டை, அக்.18: தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடந்தது. முனைவர் ஜோசப்இருதயராஜ் வரவேற்றார். தலைமையாசிரியர் தனலெட்சுமி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப் முன்னிலை வகித்தார். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சிக்கு பாடுபட்ட பள்ளி ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். 10ம் வகுப்பு மாணவி சிவரஞ்சனி காலாண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்கு கவுரவிக்கப்பட்டார். 10ம் வகுப்பில் கடந்த 5 வருடமாக தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெந்று வருவது போல் நடப்பு கல்வி ஆண்டிலும் மாணவர்கள் 100 சதவிகித தேர்ச்சி பெற பாடுபடுவது, பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப ஏற்பாடு செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றினர். ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Tags : meeting ,Parent Teacher Association ,
× RELATED அபிராமத்தில் அரசு பள்ளி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கோரிக்கை