×

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிவகங்கை, அக்.18:  சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாளை யொட்டி நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி செயலர் சேகர் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்துல்கலாம் போன்று மாணவ, மாணவிகள் அறிவியல் தொழில்நுட்பத்தில் தங்களுடைய திறனை வெளிப்படுத்தி சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் செயல்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். கண்காட்சியில் மாணவ மாணவிகள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் முத்துக்குமார், உதவி தலைமையாசிரியர் தியாகராஜன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டு சிறப்பான அறிவியல் படைப்பை உருவாக்கியவர்களை பாராட்டினர்.


Tags : Science Exhibition at School ,
× RELATED பள்ளியில் அறிவியல் கண்காட்சி