×

சிறுகூடல்பட்டியில் கவிஞர் கண்ணதாசன் நினைவுநாள்

திருப்புத்தூர், அக்.18:  திருப்புத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் இலக்கியப் பேரவை சார்பில் புகழாஞ்சலி செலுத்தப்பட்டது.திருப்புத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டி கவிஞர் கண்ணதாசன் பிறந்த ஊராகும். இன்றளவும் அவரது வீட்டிற்கு சுற்றுலாப்பயணிகள் வந்து பார்த்தவண்ணம் உள்ளனர். நேற்று அவரது நினைவுநாளையொட்டி கண்ணதாசன் இலக்கியப் பேரவையினர் புகழாஞ்சலி செலுத்தினர். காலையில் கவிஞரின் இஷ்ட தெய்வமான மலையரசி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சிறுகூடல்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ சிலைக்கு கண்ணதாசன் இலக்கிய பேரவை பொதுச்செயலாளர் பழனியப்பன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளிச் செயலர் குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோகன் செட்டியார் வரவேற்றார். இதில் திருப்புத்தூர் வழக்கறிஞர் கணேசன், கவிஞரின் கவிதைகளை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து “கவிஞரின் தத்துவ கவிதைகள்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. மேலும் விழாவில் பன்னீர்செல்வம், மருதுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறுகூடல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் இலக்கியவாதிகளும் கண்ணதாசனின் திருவுருவ சிலைக்கு மாலையணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்தனர். சுப்பிரமணியன் நன்றி கூறினார்.




Tags : Kannadasan ,occasion ,
× RELATED கட்சி அலுவலகத்தில் பொருட்கள்...