×

திருப்புத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி

திருப்புத்தூர், அக் 18:  திருப்புத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் திருப்புத்தூர், சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஆகிய ஒன்றியங்களிலுள்ள அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு, வட்டார அளவில் பயிற்சி நடைபெற்றது வருகிறது. இந்தப் பயிற்சி கடந்த 14ம் தேதி துவங்கியது. வரும் நவ.15ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக, திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைக்கிறது.

முதற்கட்டமாக கடந்த 14ம் தேதி துவங்கிய முகாம் இன்று முடிகிறது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசியர்  உதயசங்கர் செய்துள்ளார். முதன்மை கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் காளிமுத்து, ஆசிரியர் பயிற்றுநர்கள் பிரான்சிஸ், நல்லநாகு, அருண்குமார், பேபிஷீபா ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்ச்சியில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்களும், அவர்களது கைப்பேசி மூலம் பதிவு, பயிற்சி முன்தேர்வு, பின்னூட்டம், பயிற்சி பின்தேர்வு முதலியவை பிரிவு வாரியாக நடத்தப்படவுள்ளது.  


Tags : teachers ,Tirupputhur Government School ,
× RELATED புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்