மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி?

ஒட்டன்சத்திரம், அக். 18: மக்காச்சோள பயிர்களில் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.  ஒட்டன்சத்திரம் பகுதியில் 90 சதவீத நிலங்கள் கோடை உழவு செய்யப்பட்டு, மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அமெரிக்கன் படைப்புழுவை கடுப்படுத்தும் வழிமுறைகளை வேளாண்மைத்துறையினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தெரிவித்ததாவது: ஒரே பயிரை சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்ச்சி முறையை கையாள வேண்டும், பயிர் சாகுபடிக்கு பின் இனக்கவர்ச்சி பொறிகளை எக்டேருக்கு 15 என்ற எண்ணிக்கையில் அமைத்து, ஆண் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். சூர்யகாந்தி, எள், ஆமனக்கு உள்ளிட்ட பயிர்களை வரப்பு பயிராகவும், தட்டை, உளுந்து ஆகிய பயிர் வகைகளை ஊடு பயிராகவும் விதைக்கலாம். 20 முதல் 25 நாட்களான பயிருக்கு உயிரியல் பூஞ்சானக்கொல்லி பிவேரியாபேசியானா 50 கிராம்- 10 லிட்டர் தண்ணீர், மெட்டாரைசிம் அனிசோபிளே 100 கிராம், வேம்பு சார்ந்த அசாடிராக்டின் 20 மி.லி- 10 லிட்டர் தண்ணீர் கலந்து முதல் தெளிப்பு மேற்கொள்ளலாம். 40 முதல் 45 நாள் பயிருக்கு குளோராண்டி ரானிலிடிரோல் 4 மில்லி- 10 லிட்டர் தண்ணீரில் கலந்து குறுத்து பகுதியில் படுமாறு தெளித்தால் மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தாலாம்’ என்றார்.

Related Stories:

>