×

ஒட்டன்சத்திரத்தில் டெங்கு விழிப்புணர்வு

ஒட்டன்சத்திரம், அக். 18: ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமை வகிக்க, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மகேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் உற்பத்தியாகும் முறைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும்
வீடுகளில் தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்,
தண்ணீர் தேங்கும் இடங்களில் பிளிச்சிங் பவுடரக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் பாத்திரங்களை நன்கு மூடி வைக்க வேண்டும். பொதுமக்கள் யாருக்கேனும் டெங்கு அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் காசிமுருக பிரபு, வட்டார மருத்துவ கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...