×

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான காயலான் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

தண்டராம்பட்டு, அக்.18: தண்டராம்பட்டு அருகே டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான காயலான் கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிடிஓ கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், விமல்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மேலும், அங்குள்ள கடைகள், வீடுகள், வணிக வளாகங்களில் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்குள்ள காயலான் கடைகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமற்று இருந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர்கள் உதயகுமார்(43), வேலுமணி(45) ஆகியோருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். அதில், 24 மணி நேரத்தில் அங்குள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரமாக வைக்கவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Tags : shop owners ,Kaylan ,
× RELATED ஊரடங்கால் வாடகை கூட கொடுக்க...