×

பொன்.புதுப்பட்டி அரசு பள்ளியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பொன்னமராவதி, அக்.18: பொன்னமராவதி அடுத்த பொன்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளியை விழிப்புடன் கொண்டாடுவோம் என்ற விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளித் தலைமையாசிரியர் மல்லேஸ்வரி தலைமை வகித்தார். பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்டுப்புத்துறையின் சார்பில் போக்குவரத்து நிலைய அலுவலர் யோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விபத்தில்லா தீபாவளியை மாணவர்கள் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கினர்.

பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீபாவளிக்கு பாதுகாப்பான எவ்வாறு பட்டாசு வெடிப்பது என்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்டுப்புத்துறையின் சார்பில் நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் பொன்னமராவதி பேருந்து நிலையம், அண்ணாசாலை, சந்தைப்பேட்டை, மலையான்ஊரணி ஆகிய இடங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பாக எவ்வாறு பட்டாசு வெடிப்பது என்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு இதற்கான துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினர்.

Tags : Deepavali ,Pudupatti Government School ,
× RELATED விழிப்புணர்வு முகாம்