×

30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,அக்.18: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். பொது வினியோகத்திட்டத்திற்கு தனித்துறை அமைக்கப்பட வேண்டும். கூட்டுறவுத்துறை நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வானிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்து பொட்டலமாக வழங்க வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர்கள் அவர்கள் வாங்கும் கடைசிமாத ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : protest ,union ,
× RELATED போக்குவரத்து கழகங்களை கண்டித்து...