×

சாக்கோட்டை மாதா கல்வி குழுமம் சார்பில் தீபாவளி விழா கொண்டாட்டம்

கும்பகோணம், அக். 18: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் உள்ள மாதா கல்வி குழுமம் சார்பில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. மாதா கல்வி குழும தாளாளர் மரியசெல்வம் தலைமை வகித்தார். மாதா மாற்றுத்திறனாளி பள்ளி சார்பில் ஆசிரியை கீதா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அருட்தந்தை மதிவாணன், மாதா பள்ளி மாணவ மாணவிகளுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். மாதா மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாதா காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தீபாவளி பரிசுகளை தாளாளர் மரியசெல்வம் மற்றும் அருட்தந்தை மதிவாணன் வழங்கினர். இதைதொடர்ந்து மாதா காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளி சார்பில் ஆசிரியை லதா நன்றி கூறினார். விழாவில் மாதா கல்வி குழும முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Diwali Celebration ,Chakkottai ,Mata Education Group ,
× RELATED திமுக சார்பாக புதிய வாக்காளர் சேர்க்கும் பணி