×

5வது மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி

தண்டையார்பேட்டை: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (46). கடந்த மாதம் குற்ற வழக்கு ஒன்றில் போலீசார் இவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி இவருக்கு கடும் தலைவலி ஏற்பட்டதால், போலீசார் இவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதனையில் இவரது மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறையில் அனுமதித்தனர். அங்கு, 5வது மாடியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை சிறுநீர் கழிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற மணிகண்டன், திடீரென 5வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக கீழே சென்று, படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர், தற்கொலைக்கு முயன்றதற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Prisoner ,suicide ,floor ,
× RELATED தஞ்சையில் காவலர்களை தள்ளிவிட்டு கைதி தப்பியோட்டம்