×

பெயின்டர் கொலையில் 2 வாலிபர்கள் சிக்கினர்

ஆவடி, அக். 18: ஆவடி காட்டூர் ஆர்ச் அந்தோணி நகர் காலி மைதானத்தில் கடந்த 10ம் தேதி 4 பேர் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் திடீரென 3 பேர் சேர்ந்து ஒருவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது கொலை செய்யப்பட்டவர் சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (26) என்பது தெரிந்தது.

இதையடுத்து கொலையாளிகளை இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று காலை பெரம்பூர் சத்யபாமா தெருவை சேர்ந்த அரவிந்த் (18), குமார் (30) ஆகிய இருவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் பிரகாஷ் கொலையில் தொடர்பு உள்ளதை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பிரகாஷின் சகலை கார்த்திக் எங்களுக்கு நண்பர். அவர் எங்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு பிரகாஷை சந்தித்தார். பின்னர் 4 பேரும் ஆவடி காட்டூர் வந்து பேசி கொண்டிருந்தபோது கார்த்திக் கத்தியால் பிரகாஷை வெட்டி கொன்றார். பின்னர் தப்பி வந்தோம். கொலைக்கு காரணம் தெரியாது. இவ்வாறு கூறினர். இதையடுத்து தலைமறைவாக உள்ள கார்த்திக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : murder ,Painter ,
× RELATED இன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான...