×

எஸ்ஐயை தாக்க முயன்ற ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர், அக். 18: ஸ்ரீபெரும்புதூர் அருகே  சோமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக இருப்பவர் பாலசங்கர். நேற்று முன்தினம் இரவு பாலசங்கர், சோமங்கலம் அருகே எருமையூரில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. எஸ்ஐ, காரை நிறுத்தி, அதில் இருந்த 2 பேரிடம் விசாரித்தார். போதையில் இருந்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எஸ்ஐயை தாக்க முயன்றனர். இதையடுத்து  எஸ்ஐ, சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், வரதராஜபுரத்தை சேர்ந்த நாகராஜன் (39), அவரது நண்பர் முன்னாள் ராணுவவீரர் பார்த்தசாரதி (36) என தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து  அவர்களை கைது செய்தனர்.

Tags : Soldier ,
× RELATED ரயிலில் உட்கார இடம் தராததால் சக பயணியை...