×

சங்கரா கலை கல்லூரியில் தமிழ்த்துறை கருத்தரங்கம்

காஞ்சிபுரம், அக்.18: காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரி மற்றும் தேசிய சிந்தனை கழகம் இணைந்து காந்தியம் அன்றும், இன்றும், என்றும் என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் இராம.வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். தேசிய சிந்தனை கழக மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் ராஜேந்திரன் கருத்தரங்கை வாழ்த்தி பேசினார்.
காந்தியடிகள் பார்வையில் கல்வி என்ற தலைப்பில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் தெய்வசிகாமணி, சுதந்திரம் என்ற தலைப்பில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முரளிதரன், விஞ்ஞானம் என்ற தலைப்பில் உயிர் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் சம்பத் ஆகியோர்  ேபசினர்.
சிறப்பு விருந்தினரான தேசிய சிந்தனைக் கழக மாநில செயலாளரும், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை உறுப்பினருமான சூரியகுமார், காந்தியின் வாழ்வும், வாக்கும் என்ற தலைப்பில் பேசினார். மேலும், காந்தியடிகள் அன்றும், இன்றும், என்றும் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நிறைவுரை ஆற்றினார்.


Tags : Tamil Seminar ,Sankara College of Art ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...