×

வாலாஜாபாத் ஒன்றியம் பூசிவாக்கம் ஊராட்சியில் ஈஸ்வரன் கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது

வாலாஜாபாத், அக். 18: வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சியில் ஈஸ்வரன் கோயில் குளம் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் பணி முடிந்து ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம் பூசிவாக்கம் ஊராட்சி வேளாளர் தெருவில் ஈஸ்வரன் கோயில் குளம் உள்ளது. இந்த குளத்தில், கடந்த மாதம் குடிமராமத்து பணியின் மூலம் கரை மற்றும் ஆழப்படுத்தும் பகுதியை சுற்றுச்சுவர் மூலம் பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஆழப்படுத்தப்பட்ட குளத்தின் சுற்றுச்சுவர் நேற்று இடிந்து விழுந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்யடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பூசிவாக்கும் ஊராட்சி வேளாளர் தெருவில் ஈஸ்வரன் கோயில் குளம் சீரமைக்கப்பட்டது. தற்போது, 2 நாட்களாக பெய்த மழையில் குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பவில்லை. ஆனால்,  குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் கட்டி சுமார் 25 நாட்களே ஆகிறது என்பது வேதனையளிக்கிறது. இதற்கு, இந்த சுற்றுச்சுவரை  கட்டாமலேயே இருக்கலாம். இதுபோன்ற தரமற்ற பணியை செய்யும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட நிர்வாகம் இது போன்று வாலாஜாபாத் ஒன்றியத்தில் நடந்த மற்ற பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என என்றனர்.

Tags : collapse ,temple pond ,Iswaran ,Walajabad Union Poojativar Panchayat ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...