×

குளச்சலில் சேகரிக்கப்பட்ட 2670 கிலோ பிளாஸ்டிக் சிமெண்ட் ஆலைக்கு வழங்கல்

குளச்சல், அக்.18:  குளச்சல் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட 2670 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் தாழையூத்து அரசு சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  குளச்சல்  நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நகர  பகுதி கடைகள், வீடுகளில் இருந்து மக்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் தனித்தனியாக பிரித்து வாங்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக பெறப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்கள் (மறு சுழற்சி செய்ய இயலாத கழிவுகள்) நகராட்சி இயற்கை உரம்  தயாரிக்கும் கூடத்தில் தனியாக சேகரிக்கப்பட்டது.

சுமார் 2670 கிலோ  பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இந்த பிளாஸ்டிக்கை சிமெண்ட்  ஆலைக்கு இலவசமாக அளிப்பது என்று நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.  இதையடுத்து திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அரசு சிமெண்ட் ஆலைக்கு இந்த  பிளாஸ்டிக் பொருட்களை லாரி மூலம்  நகராட்சி ஆணையர் சுதா, சுகாதார ஆய்வாளர்  ஸ்ரீஜேஸ் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி