அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில்என்.ஆர் காங்கிரசுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்

புதுச்சேரி, அக். 18:  புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இந்திராநகர், கதிர்காமம், தட்டாஞ்சாவடி ஆகிய மூன்று தொகுதிகளும் தன்னுடைய தொகுதிகள் என்று தைரியமாக இருந்து வந்தார். அதனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலோடு இணைந்து நடைபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலின்போது தட்டாஞ்சாவடி தொகுதி முழுக்க சென்று வாக்கு சேகரிக்கவில்லை. இதன் காரணமாக தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றிவாய்ப்பை இழந்தார். அதைத்தொடர்ந்து தற்போது காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலில் இத்தேர்தலில் போட்டியிட ரங்கசாமி தயங்கினார். பின்னர் கட்சியினர் காட்டிய ஆர்வத்தால் போட்டியிட முடிவு செய்து, திடீரென சென்னை சென்று அதிமுக தலைவர்களை சந்தித்து காமராஜர் நகர் தொகுதியை கேட்டு வந்தார். காங்கிரசின் கோட்டையாக உள்ள காமராஜர் நகர் தொகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என்று தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.

 அதற்காக தினமும் காலையிலும், மாலையிலும் தொகுதியில் ஒரு வீடு கூட விடாமல் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றார். ரங்கசாமி தீவிரமாக பிரசாரம் செய்து வருவதால் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ரங்கசாமி மழைபெய்த போதும் தனது பிரசாரத்தை கைவிடாமல் கிருஷ்ணா நகர் பகுதியில் தொடர்ந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் பொது செயலாளர் பாலன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், டிபிஆர் செல்வம், சுகுமாறன், கோபிகா, முன்னாள் வாரிய தலைவர்கள் வேல்முருகன், பாலமுருகன், வேட்பாளர் புவனேஸ்வரன், அதிமுக மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ, மாநில துணை செயலாளர் கணேசன், தொகுதி செயலாளர் ஜானிபாய், தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ மற்றும் வேல்முருகன், பாமக ஜெயபால், தேமுதிக வேலு, புதிய நீதி கட்சி ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். இன்றைய பிரசாரத்தின்போது ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

Related Stories:

>