காட்சி பொருளான குடிநீர் தொட்டி

உளுந்தூர்பேட்டை, அக். 18: உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆசனூர் கிராமம். இந்த  கிராமத்தில் உள்ள ராஜவீதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட  குடிநீர் தொட்டி போதிய பராமரிப்பு இன்றி முட்புதர்கள் மண்டி  கிடந்தது. இது குறித்து இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கிராமசபை  கூட்டத்தில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த  தொட்டியின் அருகில் இருந்த முள்செடிகள் மட்டும் அப்புறப்படுத்தப்பட்டு  சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் இதுவரையில் அந்த குடிநீர் தொட்டி  பயன்பாட்டிற்கு வரவில்லை என அந்த தெருவை சேர்ந்தவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதான மின்மோட்டாரை விரைந்து சீரமைத்து குடிநீர் வழங்க உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED மாதவரம் மண்டலத்தின் 4 வார்டுகளில் 3...