×

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பணி

சிதம்பரம், அக். 18: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க அரசு அலுவலகங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் அரசு அலுவலகங்களை அனைத்து அலுவலர்களும் இணைந்து தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா உத்தரவின் பேரில் நேற்று சிதம்பரத்தில் அரசு அலுவலகங்கள் தூய்மைபடுத்தும் பணி நடந்தது. சிதம்பரம் நகராட்சி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், கோட்ட புள்ளியியல் உதவி இயக்குநர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், வீட்டு வசதி குடியிருப்புகள் ஆகிய பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. சிதம்பரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பால்டேவிஸ், சுகாதார மேற்பார்வையாளர்கள் காமராஜ், ஆனந்த், ராஜரராம், தில்லைநாதன், பாஸ்கர், குமார் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கொசு ஒழிப்பு பணியாளர்கள் அரசு அலுவலகங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் முன்தடுப்பு...